பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடித்த படம் சர்வம் தாள மயம்.இந்த படம் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியானது.மேலும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் தேர்வாகியுள்ளது.
இப்படத்தின் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.இதனை ஜி.வி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.