இன்று வெளியாகிறது கர்ணன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.?

It has been reported that the announcement of the first single of Karnan movie will be released today.

கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.

சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஏப்ரல் 9-ம் திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் தற்போது கர்ணன் படத்தின் அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அது என்னவென்றால் இன்று கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளிவரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.சமீபத்தில் கர்ணன் பட இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உண்மையெனில் இன்று கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.