வசூல் வேட்டை நடத்தும் "தி லெஜண்ட்".! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது "தி லெஜண்ட்" திரைப்படம் கடந்த ஜீலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை அஜித்தின்

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜீலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜெர்ரி&ஜேடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.

unknown node

படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இதையும் படியுங்களேன் –எவ்வளவு கொடுத்தாலும் தி லெஜண்ட் படத்தில் நடிக்கவே மாட்டேன்.! அடம் பிடித்த லேடி சூப்பர் ஸ்டார்.?

unknown node

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

unknown node

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு வாரம் முடிவில் தான் தி லெஜண்ட் படத்துக்கு வரும் வசூலை பொறுத்துத்தான் அதன் வெற்றித் தோல்வி முடிவாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.