பிசாசு-2வின் பட்ஜெட் 6 கோடி என கூறப்பட்டு 8 கோடியாக உயர்ந்துவிட்டதாம். ஆனால், படத்தின் வியாபாரம் 20 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.
மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிசாசு-2. ஏற்கனவே வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் தயாராகி உள்ளது. திகில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்து வருகிறார்.
unknown nodeமக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த திரைபடத்தின் பட்ஜெட் முதலில் 6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டதாம். ஆனால், படத்தின் பட்ஜெட் 8 கோடியாக உயர்ந்துவிட்டதாம்.
unknown nodeஆனாலும், படத்தின் தயாரிப்பாளர் எந்த கோபமும் படவில்லையாம். காரணம், படத்தின் வியாபாரம் 20 கோடியாக உயர்ந்துள்ளதாம். 2 கோடி அதிகமாக செலவழித்தாலும் படத்தின் லாபம் பட்ஜெட்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் தயாரிப்பாளருக்கு எந்தவித கோபமும் வரவில்லையாம்.