தீபாவளி ரேஸில் பின்வாங்குகிறாரா சங்கத்தமிழன்?! புது அப்டேட் இதோ!

இந்த வருட தீபாவளிக்கு தளபதியின் பிகில், கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள்

இந்த வருட தீபாவளிக்கு தளபதியின் பிகில், கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக தற்போது வரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

இதில் தளபதியின் பிகில் திரைப்படம் படம் ஆரம்பிக்கும்போதே தீபாவளி ரிலீஸ் என கூறித்தான் படம் தயாரானது. தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வந்துவிட்டது. மேலும் விஜய் படம் வருவதால் எப்படியும் அதற்குத்தான் தியேட்டர்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என தற்போதே தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை எந்த படமும் பின்வாங்கவில்லை. ஆனால், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் பின் வாங்கும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.