அரசியல்ல புகுந்து விளையாடுங்க! ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க!

Default Image

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க, ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க என்றும், எவன எங்க உக்கார வைக்கணும்னு திறமையை வச்சி முடிவு பண்ணுங்க என்றும் கூறியுள்ளார். தளபதி விஜயின் இந்த பேச்சால் அங்கிருந்த ரசிகர்கள் மிகவும் குதுகலமாக கைதட்டி ஆரவாரமிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்