கோடை விடுமுறைக்கு வரும் 'பிரண்ட்ஷிப்' .! பாவாடை தாவணியில் லாஸ்லியா..வேட்டி,சட்டையில் ஹர்பஜன் சிங்..!வைரல் புகைப்படம்.!

Losliya has shared a photo of herself in a skirt and scarf and Harbhajan Singh in a Vetti shirt for the song in the Friendship movie and has announced that Friendship is coming for summer vacation.

பிரண்ட்ஷிப் படத்திலுள்ள பாடலுக்காக பாவடை தாவணியில் லாஸ்லியாவும் ,வேட்டி சட்டையில் ஹர்பஜன் சிங்கும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கோடை விடுமுறைக்கு பிரண்ட்ஷிப் வரும் என்று அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் பிரண்ட்ஷிப் என்று கூறப்படுகிறது.

கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.அதில் லாஸ்லியா பாவாடை தாவணியிலும் , ஹர்பஜன் சிங், சதீஷ்,பாலா ஆகியோர் வேட்டி சட்டையிலும் உள்ளனர் .அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்,தமிழனின் தாய்மடி ,கீழடிதமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி,எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த கோடை விடுமுறைக்கு நம்ம படம் பிரண்ட்ஷிப் வருகிறது.தளபதி,தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதிலிருந்து படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் ,மே மாதத்தில் பிரண்ட்ஷிப் திரைப்படம் ரிலீஸாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

unknown node