ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடிக்கும் டெடி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node