இனிதான் ஆட்டம் ஆரம்பம் : ரஜினிகாந்த் ..!

இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார் ரஜினிகாந்த்.

unknown node

தூத்துக்குடி சம்பவத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினி ஆவர்.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு இவர் பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

unknown node

கடந்த மாதம் ஐபிஎல் போராட்டத்தின்போது, போலிஸ்காரர்களை தாக்கியவர்களைக் கடுமையாகக் கண்டித்தார் ரஜினி. ஸ்டெர்லைட் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த புதன்கிழமை சென்று சந்தித்தார். அங்கு, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,‘ யார் நீங்க?’என ரஜினியிடம் கேள்வி எழுப்பியது அதிகம் பகிரப்பட்டது.

unknown node

இந்த இரண்டு பிரச்சனைகளும் ரஜினிக்கு எதிராக உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

unknown node

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார். மாவட்டம்தோறும் உள்ள பிரச்னைகளைப் புள்ளிவிவரத்துடன் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு அரசியல் ஆட்டத்தை ஆட காத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.