நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் உள்ள கோவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் தான். இந்த கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜனின் மகன் மாமன்னர் ராஜ ராஜேந்திரன். தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள […]
திருவண்ணாமலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தீப திருவிழா தொடங்கியது. இன்று திருவண்ணமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் விழா நடைபெற்றுவருகிறது. இதனை காண திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் […]
பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை மறந்த பிரம்மனுக்கு இந்த தலத்தில் தான் முருகன் அதனை கற்பித்தார். இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் குரு தோஷம், கண் பிரச்சனைகள், உடல் நலம், கல்வி என சகலமும் சரியாகிவிடும். திருவாரூர் மாவட்டம் என்கண் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த கோவிலில் முருகனுக்கு தான் தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்புக்கு என்று தனி வரலாறு உண்டு. நாம் மிகவும் கேட்டு பழகிய அந்த புராண வரலாறு […]
திருச்சி மைய பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த உச்சி பிள்ளையார் கோவில் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு கீழ்பகுதியில் மாணிக்கவிநாயகரும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் சிவன் தாயுமானவராகவும் தரிசனம் தருகின்றனர். இந்த கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த கோவில்தான் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், விபீஷணர், ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து ரங்கநாதர் சிலையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கி தனது […]
வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை நோக்கி முருகப்பெருமான் செல்லும்போது சற்று களைப்பாக இருந்ததால் இளைப்பாறி சென்ற இடம்தான் வேலூர் தீர்த்தகிரி சன்னிதானம். இங்கே முருகன் இளைப்பாறி சென்றதற்கான பாதச்சுவடுகள் கோயில் மலையடிவாரத்தில் தற்போதும் காணப்படும். இந்த கோயில் சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரி கோவிலில் மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதற்கு எதிரே கோவில் திருக்குளம் அமைந்துள்ளது. அதனருகே 222 படிகள் […]
வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து […]
நமது அன்றாட வாழ்வில் தினமும் ஒரு நிமிடம் கடவுளை வாங்குவது மிகவும் நல்லது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தினமும் தியானம் செய்வது சிறந்தது. காரணம் காலையில் நமது மனது மிக புத்துணர்ச்சியாக இருக்கும். அப்போது நாம் அன்று என்ன செய்யவேண்டும் எனவும், இன்று நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் எனவும் நமக்குள் கூறிக்கொண்டால் நமது மூளை அதற்காக நம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிடும். அதனால் தான் பெரியவர்கள் தினமும் கடவுளை வாங்குவதையும், தியானம் செய்வதையும் வழக்கமாக செய்து வந்தனர். காலையில் […]
மேஷம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான நாள். வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இன்று மேலோங்கி இருக்கும். பிராத்தனை, தியானம் செய்வது அவசியம். ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள். உங்களின் மன உறுதி மற்றும் மன தைரியத்தால் எடுத்துக்கொண்ட காரியத்தில் சாதிக்கும் நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். மிதுனம் : இன்று உங்களை நீங்களே சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையாமல் போவதற்கு […]
இன்றைய (ஏப்ரல் 7-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்: […]
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது – விவேகானந்தர்
சிவனுக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும்,சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரங்களாக போற்றுவார்கள் ஆன்றோர்கள்.அவை ஓம் உமா மகேஷ்வராய நம; ஓம் பரதேவாய நம; ஓம் திரியம்பகாய நம; ஓம் சோமசுந்தரரேசாய நம; ஓம் சார்வாய நம; ஓம் பீமாய நம; ஓம் மஹாபலாய நம; ஓம் நீலகண்டாய நம;
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்நிலையில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவானது நடந்தது. இதையொட்டி ஆலயம் சார்பாக நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனியும் நடந்தது. இதற்கு முன் கடந்த 16 தேதி மாலை வாண வேடிக்கையுடன் மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழாவானது தொடங்கியது. இதனை தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து […]
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் […]
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையோடு மகர விளக்கு பூஜையும் மிக பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட அன்று முதல் சுவாமி ஐய்யப்பனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜையானது நாளை மாலை 6.35 மணிக்கு தொடங்குகிறது.இந்த நிகழ்வில் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் அமைந்துள்ள பொன்னம்பல […]
இந்த வருடம் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி சம்பவத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினி ஆவர்.இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு இவர் பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அதிரவைக்கும் […]
அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் திருவிழா தொடங்குகிறது. அன்று மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட […]
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் […]
மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்குள் செய்தியாளர்கள் மட்டும் செல்போன் எடுத்து செல்ல அனுமதி ஒரு தொலைக்காட்சி 2 நபர் மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி சித்திரை திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக செல்போன் கொண்டு செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா […]