கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் மூன்று படங்களை வேகவேகமாக முடிக்க உள்ள தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி

நடிகர்தனுஷ்நடிப்பில் அடுத்ததாகஎனை நோக்கி பாயும் தோட்டாவெளியாக உள்ளது. அதனை அடுத்துவெற்றிமாறன்இயக்கத்தில்அசுரன்திரைப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தைகலைப்புலி.எஸ்.தாணுதயாரித்துள்ளார். இவர் தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக தனுஷ்,பரியேறும்பெருமாள்இயக்குனருடன் இணையும் புதிய படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர்செல்வராகவன் – தனுஷ்கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் தாணு தயாரிக்க உள்ளார். தனுஷ் -செல்வா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

தனுஷ் தற்போது அசுரன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தற்போது லண்டனில் உள்ளார். அந்த படம் முடிந்த பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் செல்வராகவன் படத்திலும் சேர்த்தே நடிப்பார் என கூறப்படுகிறது.