நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகி வரும் பிகில் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இப்படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பிகில் படம் குறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிகில் படக்குழுவினர், சிங்கப்பெண்ணே பாடலை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான வெறித்தனம் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக்கின் பாடல் வரிகளில், நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், காலை 10: 30 வரை இந்த பாடலை 44 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 7,04,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும், இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரங்களே முடியாத நிலையில் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது
unknown node