மீடு விவகார வழக்கில் சிக்கிய ஆக்க்ஷன் கிங்….!ஆக்க்ஷனில் இறங்கிய அதிரடி போலீஸ்…!!

Default Image

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது  அளித்த மீடூ பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related imageஇந்த மீடு விவகாரமானது தமிழில் வெளியான நிபுணன் என்ற திரைப்படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியாகியது. அந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு மனைவியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரண் நடித்தார்.நடிகை ஸ்ருதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக குற்றம்சாட்டிய நிலையில் சமரசத்துக்கு இருவரும் மறுத்த நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகர் அர்ஜூன் மீதான மீடு விவகாரம்.இந்த குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜூன் 5 கோடி ரூபாய் கேட்டு நடிகை ஸ்ருதி மீது  மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
Image result for அர்ஜுன்

இந்த சமயத்தில் இதில் தலையிட்ட அர்ஜூனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா பணம் பறிக்கும் முயற்சியில் நடிகை ஸ்ருதி பாலியல் புகார்களை சொல்கிறார் எனக் கண்டித்தார்.இந்த பரப்பான மீடு விவகாரத்தில் கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜுனையும் , ஸ்ருதி ஹரிஹரனையும் சந்திக்க வைத்து சமரச முயற்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.இந்த நிலையில் தான் பெங்களூரு கப்பன் பூங்கா காவல்நிலையத்தில் நடிகை ஸ்ருதி புகார் ஒன்றை அளித்தார்.
Related image
அந்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அர்ஜீன் மீது 354 ஏ, 509,506, 354 ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனால் இந்த மீடு நடிகர் அர்ஜூனை ஒரு சுழற்று சுழற்றியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்