சுசித்ரா ஒரு பைத்தியக்கார கிரிமினல்! விளாசிய பயில்வான் ரங்கநாதன்!!

bayilvan ranganathan about Suchitra

சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறாக பல விஷயங்களை சொன்னார். இவரெல்லாம் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும்” என்று ஆதங்கத்துடன் வெளிப்படையாகவே சுசித்ரா  பேசினார்.

இந்த நிலையில், சுசித்ரா தன்னை பற்றி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் தானமாக பேசி கொண்டு இருக்கிறார். அவர் பேசுவதை பார்க்கும்போது மனநிலை நோயாளி போல தெரிகிறது.

ஆரம்பத்தில் என்னை பற்றி தவறாக பேசவேண்டியது பிறகு கடைசியில் என்னை பற்றி உயர்வாக பேசவேண்டியது. இப்படியெல்லாம் பேசுவது மன நோயாளி பேச்சு தானே? சுசித்ரா மீது சில புகார்கள் வந்த காரணத்தாலும், அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை என்ற காரணத்தாலும், கார்த்திக்குமார் ரொம்பவே அவரை திருத்த முயற்சி செய்தார்.

முயற்சி செய்தும் முடியவில்லை என்ற காரணத்தால் தான் கார்த்திக்குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார். சுசித்ராவை பொறுத்தவரையில் அவர் மன நோயாளி தான். அப்படி கூறி தான் ஒரு வழக்கில் இருந்து கூட வந்தார். விவாகரத்து செய்த பிறகு தனது முன்னாள் கணவன் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். ஆனால், அது கூட தெரியாமல் சுசித்ரா பேசிக்கொண்டு இருக்கிறார்.  அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாமே சட்டத்திற்கு விரோதமானது” என்றும் சுசித்ராவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay