இவரைத்தான் தீட்டி தீர்த்துள்ளாரா?!! ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொள்ளும் அருண் விஜய்!!!
என்னை அறிந்தால் படத்தின்.மூலம் தனக்கென கனிசமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் அருண் விஜய். அதற்கடுத்து குற்றம் 23, அடுத்ததாக மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் , தடம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் , ‘ யார் யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு, தமிழ் மக்களுக்கு யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தெரியும்‘ என கூறினார்
அதை வைத்து பார்த்தால் நேற்று இரவு 7 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான சீமராஜா படத்தின் ட்ரெய்லர் வந்தது. அதில் சிவா மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். ஒரு வேளை சிவாவை தான் சுட்டிகாட்டி பேசுகிறார் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
DINASUVADU