பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜுன் ...!கைது செய்ய தடை...!விசாரணைக்கு தடை இல்லை...!நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகா உயர்நீதிமன்றம் நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல்  புகார் தொடர்பாக  நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்துள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றம்நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல்  புகார் தொடர்பாக  நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்துள்ளது.

metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் அதிகம் வருகிறது . திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி வருகின்றனர்.அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன்  பாலியல் தெரிவித்தார்.

unknown node

ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது நான் கண்டிப்பாக வழக்கு தொடருவேன் என்று கூறினார் அர்ஜுன் .பின்னர் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அர்ஜுன் வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . ‘விஸ்மயா’ படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் மீது போலீசார்  நடவடிக்கை எடுத்தது.நடிகர் அர்ஜூன் மீது  354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பெங்களூரு போலீசார்.

unknown node

இந்நிலையில்  கர்நாடகா உயர்நீதிமன்றம் நடிகை சுருதி ஹரிகரன் அளித்த பாலியல்  புகார் தொடர்பாக  நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்துள்ளது.ஆனால் அர்ஜூன் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ்குமார், கைதுக்கு தடை விதித்தார். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.