Andrea Jeremiahநடிகைஆண்ட்ரியாஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட சிறிய சிறிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான நாஞ்சில் என்பவர் இயக்கி உள்ளார்.
read more-மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!
இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடுகாட்டிற்குள் இரவு நேரங்களில் படங்களில் நடிப்பதற்கு என்றால் தனி தைரியம் வேண்டும். இருந்தாலும் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
read more-பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!
இந்த இந்ததிரைப்படம்வரும் மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா படத்தில் நடிக்க இயக்குனர் அடம் பிடித்த தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா “இந்த படத்தை நான் தான் பண்ண வேண்டும் என்று இயக்குனர் ரொம்பவே அடம் பிடித்தார். ஒரு நடிகை முதன்முறை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அந்த இயக்குனர்கள் வேறு ஹீரோயினை தேடி சென்று விடுவார்கள். ஆனால் இந்த இயக்குனர் எண்ணையை வைத்து தான் இந்த படத்தை எடுப்பேன் என்று உறுதியாக நின்றார். அதனால் தான் நானும் அவருக்காக படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்.
READ MORE –நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!
பொதுவாகவே எனக்கு காடு ரொம்பவே பிடிக்கும் எனவே காடு சார்ந்த படம் என்பதாலும் எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது எனவே படத்தில் நடித்தேன். படம் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்” எனவும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
