அஜித்தின் வலிமை படப்பிடிப்பு சண்டை காட்சிகள் நடைபெறும் இடம் மாற்றம்!

It has been reported that the film crew was going to Switzerland for the fight scenes in Ajith's Valaimai and is currently going to Delhi.

அஜித்தின் 60வது படமாகிய வலிமை படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல இருந்த நிலையில், தற்போது டெல்லி சென்று இருப்பது இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித்குமார். இவர் தனது 60 வது படமாக வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வினோத் அவர்களின் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார். இந்நிலையில், போலீஸ் அதிகாரியாக அஜித் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அண்மையில் கூட இந்த படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலாகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இதுவரை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்த கட்டமாக சுவிட்சர்லாந்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது சுவிட்சர்லாந்து செல்லாமல், டெல்லி சென்று சண்டை காட்சிகள் படமாக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.