இந்த கதையை எதுக்கு எங்கிட்ட சொல்லல? இயக்குனரிடம் கடுப்பான நடிகர் அஜித்குமார்!

ajith kumar

Ajith Kumar :  வட்டாரம் படத்தின் கதையை முதலில் ஏன் எனக்கு சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் அஜித்குமார் சண்டைபோட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன்,அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த இந்த வெற்றிப்படங்கள் எல்லாம் அவருடைய திரை வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஜித்திற்கு சரண் வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

எனவே, இயக்குனர் சரணுக்கும் நடிகர் அஜித்திற்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. இதனால் சரண் வேறு படங்களை இயக்கினால் கூட அந்த கதைகளை சரணிடம் அஜித் கேட்பதும் உண்டு. அப்படி தான் சரண் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான வட்டாரம் படத்தின் கதையை கேட்டுவிட்டு இந்த கதையை எதற்காக எனக்கு சொல்லவில்லை என இயக்குனரிடம் சண்டைபோட்டாராம்.

வட்டாரம் படம் வெளியான சமயத்தில் சரியாக ஓடவில்லை ஆனால் இப்போது அந்த படத்தை பார்த்துவிட்டு கொண்டாட தவறவிட்டுவிட்டோமே என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அந்த சமயமே படத்தை பார்த்துவிட்டு சரணை நடிகர் அஜித்குமார் நேரில் அழைத்து படத்தின் கதை  அருமையாக இருக்கிறது. இந்த கதையை எதற்கு எனக்கு சொல்லவில்லை சொல்லிருந்தா நானே பண்ணிருப்பேன்.

என்கிட்ட சொல்லாம எதற்காக விட்டுவிட்டீர்கள் என்று சண்டைபோட்டாராம். அதற்கு இயக்குனர் சரண் இந்த கதை உங்களுக்கு சரியாக இருந்திருக்காது.இந்த கதையில் வளர்ந்து வரும் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களுக்கு இந்த கதையை சொல்லவில்லை என்று கூறினாராம். அதன் பிறகு தான் அஜித் சரண் இயக்கத்தில் அசல் படத்தில் நடித்தாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk