அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்

நடிகர் தனுஷின்  3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இப்போதுபேய் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.

அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார். நடைபெற்றுவரும் நடிகர், நடிகைகளின் தேர்வு முடிந்ததும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.