ராதாரவியை மரணமாக கலாய்த்த நடிகை சமந்தா

this news gives information about Actress Samantha to mix Radharathi with death-radharaviyai maranamaka kalaitha nadikai samantha

“ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்”

இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி

நயன்தாரா  இவ்வளவு நாள் சினிமாவிலோ இருந்ததே பெரிய விஷயம் .நயன்தாரா வை பற்றி வராத செய்திகள் கிடையாது.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு  நாட்கள் பிறகு மறந்து விடுவார்கள்.நயன்தாரா பேய் வேடத்திலும் , சீதா வேடத்திலும் நடிக்கிறார்.

இதற்கு முன்பு சினிமாவில் கடவுள் வேடத்தில் நடிக்க  கே.ஆர்.விஜயாவை தான் நடிப்பார்கள். இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

மேலும் கூறுகையில் , பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கூறினார் ராதாரவி.

இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில்

இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.மேலும் நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் நடிகை சமந்தா இது குறித்து தனது ட்விட்டரில் “ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.