நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரிமை,சுதந்திரம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ன நடக்கப்போகிறது என்ற மெத்தனத்தோடு சமூக வலைதளங்களில் நடமாடிக்கொண்டிருக்கும் அயோக்கியர்களை தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அப்போது தான் இது போன்ற தரங்கெட்ட செயல்களை ஒழுக்கத்துடன் சமூகம் சீரடைய வழிவகை செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.