நண்பன் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித் வேதனை.!

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith Kumar -Vetri Duraisamy

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பொது இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது இறுதிச்சடங்கானது இன்று மாலை 6 மணி அளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது.

வசூலில் சரிய தொடங்கிய லால் சலாம்! 4 நாட்களில் இவ்வளவா?

வெற்றியின் இழப்பால் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது, அவரது மறைவிற்கு அஜித் மனைவி ஷாலினி இரங்கல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இந்த விஷயத்தில் வருத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையில், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காக” என்ற வெற்றியின் முந்தைய பதிவு வைரலாகி வருகிறது. மேலும், அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு அஜித்தின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

unknown node