தல அஜீத்துடன் இணையும் பிரபல நடன கலைஞர் !

நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்

நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்ததாக அஜீத், பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்தப் படத்துக்கு, கோபி நயினார் வசனம் எழுதுகிறார். அஜீத்,. பிரபு தேவா இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.