சென்னையில் குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை.! எவ்வளவு தெரியுமா?

சென்னை : வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று

சென்னை :வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனையானது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் (எண்ணெய் நிறுவனங்கள்) ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.

இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டர்களின் விலையில் நிறுவனங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதன்படி, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

முக்கிய நகரங்கள் வாரியாக வணிக சிலிண்டர் விலை

டெல்லி – ரூ.1676

மும்பை – ரூ.1629

கொல்கத்தா – ரூ.1787

சென்னை – ரூ.1,840

ராஞ்சி – ரூ.1836

லக்னோ – ரூ.1789

நொய்டா – ரூ.1667

திப்ருகர் – ரூ.1729

பெங்களூரு – ரூ.1755

அகமதாபாத் – ரூ.1695

பாட்னா – ரூ.1947

சண்டிகர் – ரூ.1697

சிம்லா – ரூ.1782

கோவா – ரூ.1743

திருவனந்தபுரம் – ரூ.1706

சென்னையில் குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை.! எவ்வளவு தெரியுமா?