சென்னை : வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனையானது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் (எண்ணெய் நிறுவனங்கள்) ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. இருப்பினும், […]