சென்னை : வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனையானது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் (எண்ணெய் நிறுவனங்கள்) ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. இருப்பினும், […]
சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG, LPG மாற்றங்கள் செய்யகூடாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து போக்குவரத்து ஆணையம் விளக்கம் […]
PM Modi : மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. ஒவ்வொரு ஆண்டும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றி வணங்கும் வகையில் இந்த மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் இன்று மகளிர் தினத்தையொட்டி தாய், தங்கை, தோழி, காதலி உள்ளிட்ட பெண்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]
இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. அதன்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த 2023 டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39.50 குறைந்து ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1, 2024) மீண்டும் ரூ.4.50 குறைந்து […]
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு இன்று முதல் அமல். புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான விலையில் சமீபத்திய திருத்தம் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இன்று (ஜூன் 16) முதல் புதிய உள்நாட்டு எல்பிஜி இணைப்புகளுக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை ரூ.750 உயர்த்தியுள்ளன. இதனால், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு […]
சென்னை:வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.101.50 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட […]
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும்,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.அந்த வகையில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த செப்.1 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில்,பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் […]
இந்தியா-சீனா எல்லைபிரச்சனைக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் அரசு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், முதல் உத்தரவில், எண்ணெய் நிறுவனங்களுக்கு (எல்.பி.ஜி) சிலிண்டர்களை இரண்டு மாதங்களுக்கு சேமித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டது. மற்றொரு உத்தரவில், காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஐடிஐ கட்டிடங்கள் காலி செய்யப்பட வேண்டும். இவை மத்திய ஆயுதப் படையினர் தங்குவதற்காக ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளது. நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டபோது எந்தவிதமான பற்றாக்குறையையும் ஏற்படக்கூடாது என்பதற்காக எண்ணெய் நிறுவனங்களை இரண்டு மாதங்களுக்கு இருப்பு […]