அசத்தலான புதிய வசதிகளுடன் விற்பனையில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு

இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது.

unknown node

இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், 32 என்.எம் டார்க் பவரை வெளிப்படுத்தும், 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்டது.தற்போதைய மாசு கட்டுப்படுத்தும் பி.எஸ்.6 ரக வசதியை இந்த புதிய மாடல் கொண்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் அனைத்து லைட்களும் எரியும் வண்ணம் புதிய சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் தற்காலத்திற்கு ஏற்றத்தாவும், மிகவும் பிடித்ததாகவும் உருவாகியுள்ளது.