அதிகரிக்கும் வெப்பநிலை…காத்திருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென் இந்தியபதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும்.
படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், வருகின்ற 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தென்தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் வருகின்ற 03-ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இலக்கும் பொழுது ரிம இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை சுட்டியும் இருக்கக்கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025