சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK STALIN HEAT Wave

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அலை பதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. … Read more

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

heat wave

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், … Read more

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

RAIN

Weather Update : தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை … Read more

வெயிலுக்கு ஓய்வு…மழைக்கு வேலை! 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!!

rain

Weather Update: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், மரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் … Read more

இனி வெயிலுக்கு இடைவெளி…அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்.!

tn rain update

Weather Update: தமிழகத்தில் வட்டி வதைத்து வந்த வெயிலுக்கு இப்போது ரெஸ்ட் கிடைத்துள்ளது, அட ஆமாங்க அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று முதல் 16ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என … Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.!

Tamilnadu Heat

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை … Read more

மாறும் வானிலை…மக்களுக்கு ஜில் நியூஸ்.! வெயில்-மழை பற்றிய நியூ அப்டேட்!

TN Rain

Weather Update: கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை … Read more

வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

summer fruit

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  … Read more

அதிகரிக்கும் வெப்பநிலை…காத்திருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Weather Update

Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தென் இந்தியபதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது … Read more

இன்றுடன் முடிவுக்கு வருகிறது அக்கினி நட்சத்திரம்..!

கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த ஆண்டு பல இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இந்த அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல இடங்களில் மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து … Read more