பாகிஸ்தான் : தெற்கு பாகிஸ்தானில் வெப்பநிலை அதிகரித்ததால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வருகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் வெப்பநிலை 40C (104F) க்கு மேல் உயர்ந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கராச்சி சிவில் மருத்துவமனையில் 267 பேர் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு […]
MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் […]
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது இன்று முதல் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° -5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். […]
Weather Update: தென்தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 11ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான […]
Weather Update: வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை […]
Weather Update: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தென் இந்தியபதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது […]
இங்கிலாந்தின் சில பகுதிகள் கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்க மழையைப் பெறுவதில்லை மற்றும் நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட காலநிலைக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தேசிய வறட்சி குழுவின் முறையான கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஸ்டீவ் டபுள், “வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலும் […]
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தற்பொழுது கடுமையான வெப்ப அலை காணப்படுகிறது. இந்நிலையில் வரும் இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தற்பொழுது உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று டெல்லியில் வெப்பநிலை 42 டிகிரி அளவை தாண்டி வியாழக்கிழமை 44 டிகிரி செல்சியஸாக உயரும் என இந்திய வானிலை ஆய்வு […]
கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை […]
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்ஐ தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டின் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் வட தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், […]
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும், மன்னர் வளைகுடா பகுதியில் […]
வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றின் காரணமாக பீகாரில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வகையில் இன்றுவரை வெயிலால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வயதானவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கடும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனர். வெப்பத்தால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே காலை நேரங்களில் மக்கள் யாரும் வெளியில் […]