5 நாட்களுக்கு கனமழை.. இன்று இந்த 12 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

இன்று 12 மாவட்டங்களிலும், நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

tn rain

சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாளை (01.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (02.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் 3ம் தேதி தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் 4ம் தேதி தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்