மக்களே!! வாட்டி எடுக்க போகும் வெப்ப அலை...வானிலை மையம் எச்சரிக்கை.!

Weather Update: வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

heat wave tn

Weather Update:வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஆனால், தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 3 செல்சியஸ் அதிகமாக இருந்தது. புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 3° 3.5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக உள்ளது.