25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் பல்வேறு மாவட்டங்களில் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கோவை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடியுடன் மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.