" தலைமை செயலகத்தில் யாகம் " துணை முதல்வர் விளக்க வேண்டும்...திருமாவளவன் வேண்டுகோள்...!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில்  உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில்  உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியது சட்டத்திற்கு புறம்பானது.சட்ட விதிமீறல் .

மேலும் திருமாவளவன் தெரிவிக்கையில் , துணை முதலவர் யாகம் நடத்தியது தொடர்பான செய்து கேட்கவே அதிர்ச்சியளிக்கிறது . துணை முதல்வர் இதற்கான விளக்கத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று தெரிவித்தார்.