சென்னை : திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கையை வெளிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். நம்மை வீழ்த்துவதற்கு கையாண்டுவரும் உத்திகளில் முதன்மையானது அவதூறு பரப்புவது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் தேவையான மாற்றங்களை ஏற்று கொள்கிறோம். நம்மை விமர்சிப்பவர்களில் […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பால் டிசம்பர் 29 இல் நடக்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ […]
தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்துத்துவாவை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்கரை கொண்டாட முடியாது. என பேசியிருப்பார் விசிக தலைவர் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவப்பற்றியும் பேசினார். அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை பௌத்தராக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர் இல்லை. 10 லட்சம் இந்துக்களை பௌத்தர்களாக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர். […]
ஆர்எஸ்எஸூம் சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா? மனித சங்கிலிக்கு ஏன் அனுமதி மறுப்பு? என திருமாவளவன் கேள்வி. மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸூம் அரசியல் கட்சிகளான சிபிஐ (எம்), சிபிஐ மற்றும் விசிகவும் ஒரே வகையானவையா?, ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? என கேள்வி எழுப்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்டோபர் 02 காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு […]
அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு தொல் திருமாவளவன் நன்றி. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். முதல்ரவரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், […]
60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்குமானால் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் […]
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. […]
தமிழக அரசின் இடஒதுக்கீடு, கடன் தள்ளுபடி அனைத்துமே தேர்தல் நாடகம் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியர் சமுதாயத்திற்கு 20% உள் ஒதுக்கீடு கேட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் 10.5% வழங்கியதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்துவிட்டாரா? என்றும் இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் […]
தமிழக அரசுயலில் கூட்டணி அமைப்பதே பெரிய போராட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். எங்களை பிடிக்காதவர்கள் 2, 3 சீட்டுகள் என்பார்கள், அவர்கள் கூட்டணியில் சேர்வதற்கே தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தளவில் கூட்டணியில் இணைவது என்பதே ஒரு […]
ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஒருபுறம் அவ்வையார், மறுபுறம் திருக்குறள் படிக்கிறார், இன்னொரு பக்கம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் […]
பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு தினத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் நினைவிடத்துக்கு சென்றும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்தவகையில், பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் […]
அஞ்சல்துறை தேர்வை மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.எனவே அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால்அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் […]
இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது விசிக தலைவர் தொல் திருமாவளவன், ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். நாயகன், திரைத்துறையில் […]
துணைவேந்தர் சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக […]
செய்தியாளர் மோசஸ் படுகொலையில் குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், அவரது வீட்டின் அருகே மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினார்கள்.பின்பு வெட்டுக்காயங்களுடன் மோசஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,செய்தியாளர் மோசஸ் படுகொலையில் குற்றவாளிகளைக் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றம் தீர்ப்பு பலியான 13 பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி- தொல் திருமாவளவன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வரும் நிலையில், […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி பேரணி நடத்திய விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணா […]
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணியில் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி இடப்பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. […]
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியது சட்டத்திற்கு புறம்பானது.சட்ட விதிமீறல் . மேலும் திருமாவளவன் தெரிவிக்கையில் , துணை முதலவர் யாகம் நடத்தியது தொடர்பான செய்து கேட்கவே அதிர்ச்சியளிக்கிறது . துணை முதல்வர் […]
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் நெமிலியில் காஞ்சி மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறினார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் […]