ஆப்கானிஸ்தானில் பேருந்தில் இருந்து 13பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற பயங்கரவாதிகள்!!!

This news gives information about Terrorists who kidnapped 13 passengers from a bus in Afghanistan-Afghanistanil peruthil irunthu

படாக்சான் மாகாணத்தில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை பேருந்து ஓன்று ஏற்றிக்கொண்டு  தலைநகர் காபூல் நோக்கி சென்றது.

பின்பு பேருந்தில்  ஏறிய பயங்கரவாதிகள் 13 ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

படாக்சான் மாகாணத்தில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை பேருந்து ஓன்று ஏற்றிக்கொண்டு  தலைநகர் காபூல் நோக்கி சென்றது.அப்போது  பாக்லான் மாகாணத்தில் உள்ள பாக்லான் இ மர்காஷி அருகே பேருந்து  சென்றபோது பயங்கரவாதிகள் சிலர் பேருந்தை  வழி மறித்தனர்.

பின்பு பேருந்தில்  ஏறிய பயங்கரவாதிகள் 13 ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள்? தற்போது அவர்களின் நிலைமை  என்ன? என்பது தெரியவில்லை.

இந்த கடத்தலை  எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் பாக்லான் மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அவர்கள் தான் பேருந்தில் இருந்து பயணிகளை கடத்தி இருப்பார்கள் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.