கே.சி.ஆரை சந்தித்து தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளார் ஸ்டாலின்! முதல்வர் விமர்சனம்!

நேற்று தெலுங்கானா முதல்வரும், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சென்று

நேற்று தெலுங்கானா முதல்வரும், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சென்று பார்த்துள்ளார். இது பரபரப்பான அரசியல் கட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது.

பலர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலை தவிர்த்து, புதிய அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார் என தகவல்களை பரப்ப, இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஸ்டாலின், ‘ இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே’ என கூறினார்.

இருப்பினும் இவரது சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் கூறுகையில், ‘ ஸ்டாலின், சந்திரசேகர ராவை சந்தித்து தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். தேர்தலுக்கு முன்னரே தனது எண்ணத்தை அவர் மாற்றியுள்ளார்.’ என இருவரது சந்திப்பு குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

DINASUVADU