திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம்.!

புதிய திமுக நிர்வாகிகளோடு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் துரைமுருகன், எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர். புதிய நிர்வாகிகளுடன் முதன் முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர், பொருளார், துணை … Read more

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.! திமுக அரசு மீது இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

ஆளும் திமுக அரசின் கீழ், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆளும் திமுக ஆட்சி பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது எனவும், தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை … Read more

10 சதவீத இட ஒதுக்கீடு.! தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு.!

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உயர்பிரிவு வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக … Read more

ஆளுநர் தேவையில்லை என கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.! ஓபிஎஸ் கருத்து.!

தமிழக ஆளுநர் தேவையில்லை என கூற இந்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கொள்கைகள் பற்றி பேசுகிறார். சட்ட அமைப்புக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் மூலமும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு குரல்களும் , எதிர்ப்பு குரல்களும் வலுத்து … Read more

மன்னிப்பு கேட்க தயார்.! எதற்காக மன்னிப்பு கேட்கனும்.? ஆவேசமாக பேசிய ஆ.ராசா.! 

மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை கூறுங்கள். நான் 2 ஜியையே பார்த்தவன். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் கூடாது. – திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் நடைபெற்ற திமுக விழாவில் ஆவேசமாக பேசினார்.   திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக … Read more

நம் நாட்டில் கோலம் போடுவது கூட தேசவிரோதம் தான்! டிவிட்டரில் விமர்சித்த எம்பி கனிமொழி!

குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

திமுக பேரணிக்கு விளம்பரம் செய்த அதிமுகவுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் பேட்டி!

திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்த உள்ளன.  அந்த பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் அவரச மனு கொடுக்கப்பட்டிருந்தது.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளை திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன. இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

BREAKING : திமுக பேரணிக்கு அனுமதி குறித்து எந்தவித உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை திமுக தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.  இதற்கு தடை கேட்டு போடப்பட்டிருந்த அவசர வழக்கில் நீதிபதிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.  மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன. இந்த பேரணிக்கு தடை கேட்டு வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த அவசர … Read more

தொடரும் போராட்டங்கள்! ரஜினியின் டிவிட்டர் கருத்து! ட்ரெண்டாகும் ஆதரவும்! எதிர்ப்பும்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஆதரவையும்  எதிர்ப்பையும் பெற்று வருகிறது. மத்திய அரசனது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தாக்குதலும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல கல்லூரி மாணவர்கள் உட்பட பல இடங்களில் … Read more

மீண்டும் மேயருக்கு மறைமுக தேர்தல்! விரைவில் அவரசட்டம்! தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நேரடியான தேர்தல் முறையென்றால், கவுன்சிலர் தேர்தல் போன்று, மேயரையும் மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பர். கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் … Read more