பொங்கல் பரிசு:இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் …!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று முன்தினம்  தொடங்கி  வைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று முன்தினம்  தொடங்கி  வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய்,இன்று   (ஜனவரி  7-ம் தேதி) முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது.  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.258 கோடியில் 2.02கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்பு  ஆகும்.