இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
unknown nodeஇவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது ஆஸ்திரேலியா தங்களது முதல் விக்கெட்டை 146 ரன்னில் இழந்தது.இதன் மூலம் ஆரோன் பிஞ்ச் 82 ரன்னில் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ஸ்மித் 10 ரன்களுடன் அவுட் ஆனார்.ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார்.பின்னர் களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல் 20 ரன்னும், ஷான் மார்ஷ் 23 ரன்னும்,உஸ்மான் கவாஜா 18 ரன்னும் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார்.
unknown nodeஇறுதியாக ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ரன்கள் குவித்தது.பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகம்மது அமீர் 5 விக்கெட்டையும் ,ஷாஹீன் அஃப்ரிடி 2 பறித்தனர்.
unknown node308 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பகர் ஜமான், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே பகர் ஜமான் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய பாபர் ஆஸம் ,இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணி இணைய அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.பாபர் ஆஸம் 7 பவுண்டரி அடித்து 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பிறகு நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக் அரைசதத்தை நிறைவு செய்து 53 ரன்களுடன் அவுட் ஆனார்.
unknown nodeஅடுத்தடுத்து களமிறங்கிய முகமது ஹபீஸ் 46 ரன்களும் ,ஹசன் அலி 32 ரன்களும் எடுத்து வெளியேறினார்.இறுதியாக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தது. ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் , கேன் ரிச்சர்ட்சன் ,மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.