" மோடி தான் மீண்டும் பிரதமர் ".....புகழ்ந்து தள்ளிய முலாயம் சிங் யாதவ்.....!!

மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து

மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் யாதவ்_வின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.