கமல்ஹாசன் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்! தமிழிசை வலியுறுத்தல்!

நேற்றைய அரசியல் விவாத பொருளாகவே மாறிவிட்டது கமல்ஹாசன் கூறிய கூற்று. நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசுகையில் ' இந்தியாவின்

நேற்றைய அரசியல் விவாத பொருளாகவே மாறிவிட்டது கமல்ஹாசன் கூறிய கூற்று. நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசுகையில் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அது காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸே’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் கொதிப்படைந்த பாஜக நிர்வாகிகள் பலத்த எதிர்ப்பை காட்டிவருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா,சுப்பிரமணியன் சாமி என பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று ஒரு பேட்டியில், ‘ கமல்ஹாசன் தான் கூறிய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டு அவர் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்’ என தெரிவித்தார்.

DINASUVADU

கமல்ஹாசன் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்! தமிழிசை வலியுறுத்தல்!