அமேஸான்(AMAZON) நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வெற்றியின் ரகசியம் என்ன?இதோ அவர் கருத்து....

எதையும் வேகத்தோடும், வலுவோடும் எதிர்கொள்வதே தமது வெற்றியின் ரகசியம் எனத் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

எதையும் வேகத்தோடும், வலுவோடும் எதிர்கொள்வதே தமது வெற்றியின் ரகசியம் எனத் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

54 வயதிலேயே உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். தமது தாத்தாவின் கேரேஜில் (Garage ) இருந்து அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை தளம் மூலம் புத்தக விற்பனையைத் தொடங்கிய ஜெஃப் பெசோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். அவர், வேகமும், வலிமையுமே தமது வெற்றிக்குக் காரணம் என வேனிட்டி ஃபேர் என்ற ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது எவ்வளவு பெரிய அடியை வாழ்வில் சந்தித்தாலும், வேகத்தோடு அதிலிருந்து மீளமுடியும் என குறிப்பிட்டுள்ளார். எப்போதும் எதிர்காலத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்றும், சார்பை இழந்துவிட்டால், எதிர்காலமே ஜெயிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அமேஸான்(AMAZON) நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வெற்றியின் ரகசியம் என்ன?இதோ அவர் கருத்து....