சென்னை : சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி நிறுவனம் (Realme) குவால்காமின் Snapdragon 8 Elite அம்சம் கொண்ட மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இறுதியாக உறுதி செய்துள்ளது. ஆம், இந்த மொபைல் அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் Realme GT 7 Pro போன், Amazon மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Power that sets new benchmarks! […]
Air Cooler : வெயிலுக்கு இதமாக குறைந்த விலையில் தரமான பிரண்டை கொண்ட 5 ஏர்கூலரை பற்றி இதில் பார்க்கலாம். கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஏர் கூலர் தான் சரியான தீர்வாக இருக்கும். தற்போது நமக்காகவே அமேசான், கோடை கால ஆஃபராக இந்த ஏர் கூளரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். நாம் வாங்க கூடிய பொருள் தரமாகவும், விலை குறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதுமே […]
Smart watch: அனைவரும் விரும்பக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள் அமேசானில் அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேரம் பார்ப்பதற்கு மட்டும் இங்கு யாரும் வாட்ச்களை பயன்படுத்துவது இல்லை. ஸ்டைலுக்காகவும் வாட்ச்களை அணிந்து வருகின்றனர். அதிலும் ஸ்மார்ட் வாட்ச் என்று எடுத்துக்கொண்டால், அண்மை காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு அல்ல, நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் பேசுவதற்கு, மெசேஜ்களை பார்ப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தற்பொழுது, அமேசானில் […]
iQOO Z9 5G : iQOO சீரிஸ் ஸ்மார்ட்போன் மொபைல்கள் மொபைல் வாசிகள் மத்தியில் அதற்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. iQOO ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் எல்லாம் மிகவும் கவரும் வண்ணம் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். குறிப்பாக iQOO ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும், சிறந்த கேமிங் அனுபவத்துக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே, இந்தியாவில் iQOO Z9 5G மார்ச்-13ம் தேதி அறிமுகம் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது iQOO Z9 […]
Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) […]
பிரபல மொபல் நிறுவனமான லாவா சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை அறிமுகம் செய்தது. இந்த போன் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் பலருக்கும் இந்த போன் பிடித்துப்போக உடனடியாக பலரும் வாங்கினார்கள். இந்த போனின் அடிப்படை விலை 20,000. இந்த விலையில் தான் இந்த போன் அறிமுகமும் ஆனது. இதனை எடுத்து 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்த ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை ரூ.16,000-க்கு வாங்கும் சலுகையை […]
பிரேசிலின் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கவர்னர் கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகத்தின்படி, பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டுகிறது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக […]
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமேசான் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் மற்றும் ஃபயர் எச்டி 10 கிட்ஸ் ப்ரோ டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, தற்போது ஃபயர் எச்டி 10 (2023) என்ற புதிய டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபயர் எச்டி 10 டேப்லெட்டின் புதுப்பிக்கப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த புதிய ஃபயர் எச்டி 10 டேப்லெட், முந்தைய மாடலில் இருந்து […]
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் என்பது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாகும். இந்த நாளில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருள்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த பல தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் சலுகைகளுடன் வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக ஒரு நாள் முன்னதாக அதாவது, அக்-7ம் தேதியே தொடங்கவுள்ளது. இது […]
அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தபடியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். இதன்படி அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் […]
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் Flipkart மற்றும் Amazon நிறுவனங்களுக்கு நோட்டீஸ். டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக Flipkart மற்றும் Amazon நிறுவனங்கள் ஆன்லைனில் ஆசிட் விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள துவாரகாவில் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது பள்ளி (12ம் வகுப்பு) மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் […]
அமேசான் பணிநீக்கம் காரணமாக உயர் அதிகாரிகள் உட்பட 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்று கம்ப்யூட்டர் வேர்ல்ட் அறிவித்துள்ளது . பல நாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் சந்தை (E-commerce) நிறுவனமான அமேசான் ஏற்கனவே அறிவித்திருந்த ஊழியர்களை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் பணிநீக்க செயல்முறை சில மாதங்களுக்கு தொடரும் என அறிவித்திருந்தார். இதையடுத்து வரும் மாதங்களில் உலகம் முழுவதிலும் […]
இந்தியாவில் அமேசான் அகாடமியை தொடர்ந்து உணவு விநியோக சேவைகள் நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு. இந்தியாவில் உணவு விநியோக சேவைகளை நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 29 முதல் இந்தியாவில் உணவு விநியோக சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, அமேசான் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவக ஒப்பந்தாரர்களிடம், மே 2020-இல் தொடங்கிய உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. […]
அமேசான் தனது ஆன்லைன் கற்றல் தளமான அமேசான் அகாடமியை இந்தியாவில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி, போட்டித்தேர்வு, மற்றும் நுழைவுத்தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்கு சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இதற்காக பல்வேறு ஆன்லைன் கற்றல் தளங்கள் அமைக்கப்பட்டன. இதில் அமேசானால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் […]
அமேசான் நிறுவனம் இந்த வாரம் பணிநீக்க வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமேசான் நிறுவனம் 10,000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமேசான் தற்போது அந்த வேலையை தொடங்கி விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது குறித்து வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில், நாங்கள் ஆழமாக யோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளோம், அதன்படி சில குழுக்களை ஒருங்கிணைத்து சில பதவிகளை அதன்மூலம் […]
இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம். கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலையில் உள்ள சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது. அதுவும், இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது என இந்த விஷயத்தை அறிந்தவர்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமேசானின் சாதன அமைப்பு, மனிதவள பிரிவு, சில்லறை விற்பனை பிரிவுகளில் ஊழியர்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது. மூலதன மதிப்பு […]
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் இருந்து 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார். கணினி அறிவியலில் நான்காம் ஆண்டு படிக்கும் பிசாக் மொண்டல், ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு அதிக ஊதியத்துடன் வேலையை பெரும் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிசாக் மொண்டல் பிர்பூமின் ராம்பூர்ஹாட்டின் ஒரு சாதாரண பின்னணி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை விவசாயி, தாய் அங்கன்வாடி பணியாளர். இதுகுறித்து அவர் இந்தியா டுடேவிடம் அளித்த […]
உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி ட்வீட். உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருபக்கம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய […]
அமோசான் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதிப்பு. பிரபல சர்வதேச வணிக நிறுவனமான அமோசனுக்கு இந்திய வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சிசிஐ (Competition Commission of India) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபியூச்சர் ரீடைல் என்ற வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20219-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அமோசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், […]
அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரளாவை சேர்ந்த நபருக்கு ஒரிஜினலாக பாஸ்போர் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா எனும் கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போட் கவர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதியும் மிதுனுக்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் தான் இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் […]