பிரசவத்திற்கு பின் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா ?

This news gives information about do you know the foods that women should eat after the delivery - pirasavathirkku pin penkal unna vendiya unavukal

பிரசவமான பெண்களை உட்கொள்ள வேண்டிய உணவுகள்.

பெண்களை பொறுத்தவரையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவம் ஆனா பின்னும் சரி, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்காக உணவு உன்ன வேண்டிய அவசியம் உள்ளது.

unknown node

ஏனென்றால், குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் தாய் மூலமாக குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தை பிறந்த பின்பும், தாயின் தாய்ப்பால் மூலமாக தான் குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது.

குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் பிரசவமான பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம்.

இரும்புசத்து நிறைந்த உணவுகள்

பெண்களுக்கு பிரசவத்தின் போது, அவர்களது உடலில் இருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறிவிடுகிறது. இதனால் அவர்களது உடலில் இரத்த அளவு குறைந்து காணப்படுகிறது.

unknown node

இதனை தடுப்பதற்கு, இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டியது மிகவும் அவசியம். இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்பதால், குழந்தைக்கு தேவையான பால் சுரக்க இந்த உணவுகள் உதவுகிறது.

தானிய உணவுகள்

unknown node

பிரசவத்திற்கு பின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நமக்கு பிடித்தமான உணவுகளை உண்ணாமல், தானிய உணவுகளை உண்பது மிகவும் அவசியம். இந்த உணவுகளை உண்பதன் மூலம் தாய் சேய் இருவரது உடலுக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

கால்சியம் மற்றும் மினரல்

unknown node

பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் கால்சியம் மற்றும் மினரல் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இந்த உணவுகளை உண்பதால் தாய் மற்றும் குழந்தையின் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. தசைகள் வலு பெறுவதற்கும் இவை உதவுகிறது.

வைட்டமின் நிறைந்த உணவுகள்

பிரசவத்திற்கு பின் பெண்கள் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். உடலுக்கு புது செல்களை உற்பத்தி செய்து தோள்களை புதுபிக்க உதவுகிறது.

unknown node

வைட்டமின் நிறைந்த உணவுகளான, பழங்கள் மற்றும் காய்கறிகளை விரும்பி உண்ண வேண்டும். இவைகளை உண்ணும் போது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் எந்த நோய்களும் ஏற்படாமல் பார்த்து கொள்வதற்கு வைட்டமின் நிறைந்த உணவுகள் உதவுகிறது.

நார்சத்து நிறைந்த உணவுகள்

பிரசவத்திற்கு பின் பெண்கள் நார்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த சமயங்களில் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினையினால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றவர்களுக்கு அதிகப்படியான வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

unknown node

எனவே, நார்சத்து நிறைந்த உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.