டெல்லி காற்று மாசு : மருத்துவரின் அறிவுரைப்படி டெல்லியை விட்டு புறப்பட்ட சோனியா! எங்கு தங்குகிறார் தெரியுமா?

Congress President Sonia Gandhi went to Goa with Rahul Gandhi on the advice of a doctor due to air pollution in Delhi.

டெல்லி காற்று மாசு காரணமாக, மருத்துவரின் அறிவுரைப்படி ராகுல் காந்தியுடன் இணைந்து கோவாவிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில், கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது.  காற்று மாசு மட்டுமல்லாமல் கொரானா வைரஸ் பரவலும் இந்தியத் தலைநகரான டெல்லியை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காற்று மாசு காரணமாக அவரது உடலில், உடல்நல குறைவு ஏற்படக் கூடும் என்பதால், மருத்துவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காற்று மாசு இல்லாத இடத்தில் சிறிது காலம் இருக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

இதனையடுத்து  மருத்துவர்களின் அறிவுரைப்படி,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெள்ளிக்கிழமை அன்று தனது மகன் ராகுல் காந்தி உடன் இணைந்து கோவா தலைநகர் பனாஜி சென்றுள்ளார்.