Tag: #AirPollution

மழைக்கு பிறகு சற்று உயர்ந்த டெல்லி காற்றின் தரம்.. ஆனாலும், மோசமான அளவு தான்.!

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைய எட்டி வருகிறது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்வதற்கே சிரமப்படும் அளவுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த காற்று மாசுவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர வாகன கட்டுப்பாடு, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை, தண்ணீர் லாரி மூலம் நீர் பீய்ச்சி அடிப்பது, செயற்கை மழை பொழிவு என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் […]

#AirPollution 3 Min Read
Delhi air pollution

காற்று மாசுபாடு..மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.! சுகாதார அமைச்சகம்

காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் பேருந்துகள், லாரிகள், மற்ற மாநில டாக்சிகள் ஆகியவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி […]

#AirPollution 6 Min Read
air pollution

டெல்லியில் காற்று மாசு: நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை (9 ம் தேதி) முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என அம்மாநில அரசு  அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், […]

#AirPollution 3 Min Read
Delhi school

அதிகரிக்கும் காற்று மாசு.! டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு , பட்டாசுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்காளாக காற்றின் தரம் மிக குறைந்து காணப்படுவதால், காற்று மாசு அளவானது 350ஐ தாண்டி உள்ளதால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லி காற்று மாசுவை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் இன்று மற்றும் […]

#AirPollution 3 Min Read
School Leave - Air Polution in Delhi

டெல்லியில் இன்று முதல் டீசல் பேருந்துகள் இயங்க தடை.!

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதால் பிற மாநிலங்களில் இருந்து இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 30ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் டீசல் பேருந்துகளுக்கு முழுமையான தடையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருவதாக கூறிய கோபால் ராய், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக […]

#AirPollution 5 Min Read
delhi Diesel Bus

டெல்லியில் நவ-1 முதல் டீசல் பேருந்துகள் நுழையத் தடை.!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற மாநிலங்களில் இருந்து வரும் டெல்லியில் இயங்கும் அனைத்து டீசல் பேருந்துகளும் நவம்பர் 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் டெல்லி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 397 ஆக […]

#AirPollution 6 Min Read
Diesel Bus

#JustNow: அக்.1 முதல் 2023 பிப்ரவரி வரை இதற்கு தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு

கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு.  குளிர்காலத்தில் மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க 2022 அக்டோபர் 1 முதல் 28 பிப்ரவரி 2023 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று, டெல்லி அரசாங்கம், அதன் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் […]

#AirPollution 6 Min Read
Default Image

டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு….!

டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த பல மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்ட நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அடுத்த அறிவிப்பு […]

#AirPollution 3 Min Read
Default Image

#BREAKING : டெல்லியில் காற்று மாசு – அரசு அலுவலர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க உத்தரவு..!

காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]

#AirPollution 5 Min Read
Default Image

டெல்லி காற்று மாசு : மருத்துவரின் அறிவுரைப்படி டெல்லியை விட்டு புறப்பட்ட சோனியா! எங்கு தங்குகிறார் தெரியுமா?

டெல்லி காற்று மாசு காரணமாக, மருத்துவரின் அறிவுரைப்படி ராகுல் காந்தியுடன் இணைந்து கோவாவிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. டெல்லியில், கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது.  காற்று மாசு மட்டுமல்லாமல் கொரானா வைரஸ் பரவலும் இந்தியத் தலைநகரான டெல்லியை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு காற்று மாசு காரணமாக அவரது உடலில், உடல்நல குறைவு ஏற்படக் கூடும் என்பதால், மருத்துவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காற்று மாசு […]

#AirPollution 2 Min Read
Default Image

டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்! 5 ஆண்டுகள் சிறை!

டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம். டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த சட்டத்தின்படி, காற்று மாசு ஏற்படுத்தினால், ரூ.1 கோடி அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், காற்று மாசை தடுக்க அமைக்கப்படவுள்ள வாரியத்தில், அரசு துறை அதிகாரிகள், மற்றும் மாநில […]

#AirPollution 2 Min Read
Default Image

உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு. உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா […]

#AirPollution 4 Min Read
Default Image

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு

ஒரு புதிய உலகளாவிய ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தை உயிரிழப்புகள் சமையல் எரிபொருட்களிலிருந்து வரும் தீப்பொறிகள் தான் காரணமாக இருக்கிறதாம். கடந்த, 2019 ஆம் ஆண்டில் 1,16,000 க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறந்தனர். இதனை, தொடர்புடைய எண்ணிக்கை துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 2,36,000 ஆக உள்ளது என்று குளோபல் ஏர் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் […]

#AirPollution 3 Min Read
Default Image

டெல்லியில் அக்.15 முதல் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை.. முதல்வர் அதிரடி!

காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தளவில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்படுகிறது. இது, டெல்லியில் ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும். இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு காரணமாக நடப்பாண்டு மட்டும் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் […]

#AirPollution 3 Min Read
Default Image

டெல்லியில் காற்று மாசுபாடு! கடந்த 6 மாதத்தில் 24,000 பேர் உயிரிழப்பு!

டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் […]

#AirPollution 3 Min Read
Default Image

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு! தெளிவாக தெரிந்த இமயமலை!

ஊரடங்கு உத்தரவால், நம் கண்களுக்கு மறைவாக இருந்த சில இயற்கை காட்சிகளை ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், பல சிரமங்கள் இருந்தாலு, சில நன்மைகளும் உண்டு. ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால், […]

#AirPollution 5 Min Read
Default Image