என்ன பிக்பாஸ் 2 நேரம் மாறிருச்சா..?அப்ப எந்த நேரம் பிக்பாஸ்..??

விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என

விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

unknown node

மும்தாஜ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, ஷாரிக், மகத், பாலாஜி, அவரின் மனைவி நித்யா, வைஷ்ணவி, பொன்னம்பலம், டேனி, ரம்யா ஆகிய 16 பேரும் கலந்துகொள்ள, வார இறுதி எபிசோடுகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

unknown node

முன்பு திட்டமிட்டபடி 100 நாள்கள் என்றால் இம்மாதம் 24-ம் தேதி பிக் பாஸ் முடிவடைய வேண்டும். ஆனால், ஷோ மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விகடன்.காம் எக்ஸ்க்ளூசிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது. கமல்ஹாசனும் ஷோவிலேயே இதை உறுதிப்படுத்திவிட்டார்.

unknown node

இந்த நிலையில், செப்டம்பர் 24 முதல் இரவு 9 மணிக்கு ’அரண்மனை கிளி’ என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக புரொமோ வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அப்படியானால் ‘பிக் பாஸ்’ ஷோ? விஜய் டிவி தரப்பில் கேட்டபோது, ‘கடைசி ஒரு வாரம் மட்டும் அதாவது செப்டம்பர் 24 முதல் 30 வரை பிக் பாஸ் இரவு 9.30-க்கு என மாற்றப்பட்டுள்ளது’ என்கிறார்கள்.

DINASUVADU