ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
unknown nodeஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
unknown node8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஃப்கான் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
unknown nodeகாவல் நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேறு எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
DINASUVADU